Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் மூக்குவழியில் கொரோனா தடுப்பு மருந்து ...ஜனவரி முதல் பயன்பாடு

    இந்தியாவில் மூக்குவழியில் கொரோனா தடுப்பு மருந்து …ஜனவரி முதல் பயன்பாடு

    மூக்குவழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தான ‘இன்கோவாக்’ ஜனவரி மாதத்தின் நான்காவது வாரத்தில் பயன்பாட்டிற்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    உலகம் முழுவதிலும் தடுப்பூசி வாயிலாகவே கொரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை வெவ்வேறு விதங்களில் செலுத்த முன்னெடுப்பானது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், மூக்கின் வாயிலாக செலுத்துதல் உட்பட பல்வேறு முன்னெடுப்புகளும் அடங்கும். 

    இந்த முன்னெடுப்புகளில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் உலகின் முதல் மூக்குவழி செலுத்தும் ‘இன்கோவாக்’ கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. 

    இந்த தடுப்பு மருந்தை இரு தவனைகளில் செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் மற்றும் இரண்டாவது தவணையின்போது செலுத்திக்கொண்ட  கொரோனா தடுப்பூசிக்கு மாறாக, மூன்றாவது தவணையின்போது (பூஸ்டர்) மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ளலாம். 

    இந்த ‘இன்கோவாக்’ தடுப்பு மருந்தானது, வரும் ஜனவரி மாதம் 4-ஆவது வாரத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்தானது அரசுகளுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.325-க்கும், தனியாருக்கு ஜிஎஸ்டியுடன் ரூ.800- க்கும் விற்பனை செய்யப்படுமென பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு – உத்தரவிட்ட தமிழக முதல்வர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....