Sunday, April 28, 2024
மேலும்
    Homeஅறிவியல்செவ்வாய் கிரகத்தில் ஆறு: புகைப்படத்தை வெளியிட்டது நாசா

    செவ்வாய் கிரகத்தில் ஆறு: புகைப்படத்தை வெளியிட்டது நாசா

    செவ்வாய் கிரகத்தில் மறைந்து போன ஒரு ஆற்றின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் படிவப் பாறைகள் காணப்படுகின்றன.

    கடந்த மாதம் ஜூன் 30ம் தேதி ‘மனதை மயக்கும் ஏரி’ என்ற பெயரில் செவ்வாய் கிரகத்தில் மறைந்து போன ஆற்றின் புகைப்படத்தை  நாசா வெளியிட்டது. இந்த புகைப்படத்தில் உள்ள பாறைப்பகுதிக்கு அலாஸ்காவின் தேசிய பூங்காவில் உள்ள ஒரு இடத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த ஆற்றுப்படுகை பற்றிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்து வரும் பெர்ஸெவரன்ஸ் ரோவர் எனப்படும் ரோபோவானது அங்கு உயிர்கள் வாழ்ந்த அடையாளங்களைக் கட்டாயம் கண்டறியும் என்று உறுதியாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

    இந்த புகைப்படங்கள் அங்குள்ள படிமப் பாறைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக பாறைகளின் மீது தண்ணீர் ஓடுவதாலோ அல்லது சிறிய மண் துகள்கள் காற்றினால்/நீரினால் அடித்து வரப்பட்டு ஓரிடத்தில் குவிக்கப்படுவதாலோ இந்த படிமப் பாறைகள் உருவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    செவ்வாய் கிரகத்தில் பிற பகுதிகளைப் போல இந்த ஆற்றுப்பகுதியும் வறண்டு காணப்படுகிறது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு விஞ்ஞானிகள், ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கட்டாயம் இருந்துள்ளது என்கிற முடிவுக்கு வந்துள்ளனர். தண்ணீர் இருந்திருந்தால் நிச்சயம் அங்கு உயிர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர்கள் நம்புகின்றனர்.

    ரோவர் அனுப்பிய இந்த புகைப்படத்தைக் ஆராய்ச்சி செய்த நாசா விஞ்ஞானியான கேட்டி ஸ்டாக் மோர்கன், செவ்வாய் கிரகத்தில் உள்ள படிமப் பாறைகளின் தெளிவான புகைப்படம் இதுவாகும் எனக் கூறியுள்ளார்.

    குக்கரின் அழுத்ததைப் போன்று அதிக அளவு அழுத்தத்தால் செவ்வாய் கிரகத்தின் தளம் முழுவதும் கடினமான பாறைகள் உருவாகியுள்ளது. இந்த பகுதிகளில் உயிர் வாழ்ந்த அடையாளத்தைக் கண்டறிவது கடினம். படிமப் பாறைகள் மிகவும் மிருதுவானவை. இவற்றை ஆராய்ச்சி செய்வதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் வரலாற்றை அறியலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    இதுபோல 2012ம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர், தொடர்ந்து பத்து ஆண்டுகளாக செவ்வாய்க் கோளில் ஆய்வுப் பணியினை செய்து வருகிறது.

    செய்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பாறையினைத் துளையிட்டு அதில் இருந்த துகள்களை இந்த ரோவர் சேகரித்துள்ளது. கியூரியாசிட்டி ரோவரின் உள்பகுதியில் அமைந்துள்ள தொழில்நுட்பத்தின் மூலம் இந்த மண்துகள்கள் சோதித்து பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வானத்தில் வாழ்க்கை: கண்முன் தோன்றும் வருங்காலம் !!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....