Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணில் தெரியப்போகும் நட்சத்திரம்; நாசா தகவல்!

    50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணில் தெரியப்போகும் நட்சத்திரம்; நாசா தகவல்!

    ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பச்சை நிற வால் நட்சத்திரம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி பூமிக்கு அருகில் வர உள்ளது.

    கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பச்சை வால் நட்சத்திரம் ஒன்றை நாசா கண்டறிந்தது. இந்த பச்சை வால் நட்சத்திரமானது பூமிக்கு மிக அருகில் வரவுள்ளதாகவும், இந்த வால் நட்சத்திரத்திற்கு சி/2022 இ3 (இசட்.டி.எம்.) எனவும்  நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இதன்பின்பு, இந்த பச்சை வால் நட்சத்திரத்தை நாசா தொடர்ந்து கவனித்து ஆய்வுகளை நடத்தி வந்தது. இந்த ஆய்வின் முடிவில் மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது கண்டறியப்பட்டது. 

    மேலும், இந்த பச்சை வால் நட்சத்திரம் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்றும், அந்த நேரத்தில் அது பூமியிலிருந்து சுமார் 2 கோடியே 60 லட்சம் மைல்கள் தொலைவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த அரிய வால் நட்சத்திரம் வானத்தில் ஒரு மங்கலான பச்சை நிற கோடு போல் தெரியுமென்றும், வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பார்வையாளர்கள் தொலைநோக்கி இல்லாமல் இரவில் வெறும் கண்களால் பார்க்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். தொலைநோக்கியின் மூலம் பார்த்தால் பச்சை நிறம் சரியாக தெரியுமென்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    இந்த பச்சை நிற வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எவ்வித பிரச்சனையும் இல்லையென்றும் நாசா தெரிவித்துள்ளது. 

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....