Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆகஸ்ட் 14-ல் மட்டும் 250 கோடிக்கும் மேல் மது விற்பனை

    ஆகஸ்ட் 14-ல் மட்டும் 250 கோடிக்கும் மேல் மது விற்பனை

    டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ஒரே நாளில் ரூபாய் 273 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15) 76-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும், சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றினார். 

    இதனிடையே, சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 15) விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அதற்கு முந்தய நாளான ஆகஸ்ட் 14-ம் தேதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது. 

    இதன்படி, டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ஒரே நாளில் ரூபாய் 273 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

    சென்னையில் ரூ.55.77 கோடியும், சேலத்தில் ரூ.54.12 கோடியும், திருச்சியில் ரூ.53.48 கோடியும் கோவையில் ரூ.52.29 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை இனி வாங்க முடியாதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....