Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுடெலிவரி சேவைகளை வழங்கும் டன்சோ நிறுவனம் காட்டும் கெடுபிடி: வாகன ஊழியர்கள் போராட்டம்

    டெலிவரி சேவைகளை வழங்கும் டன்சோ நிறுவனம் காட்டும் கெடுபிடி: வாகன ஊழியர்கள் போராட்டம்

    இன்று காலை 9 மணியளவில் சென்னை மையிலாப்பூரில் 100-க்கும் மேற்பட்ட டன்சோ வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்டர் செய்யும் பொருட்களை எடுத்து செல்லும் நிறுவனமான டன்சோவில் (Dunzo) பல இளைஞர்கள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் வேலை பார்த்து வருகின்றனர். 

    சென்னையில் இந்த நிறுவனத்தின் செயலியை பயன்படுத்தி பலரும் ஆர்டர் செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் முழு பணமும் நேராக வாகனம் ஓட்டுநரிடம் வருவதில்லை. நிறுவனத்திற்கு போகவே வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கிறது. மழை மற்றும் பரபரப்பான நேரங்களில் ஆர்டருக்கு ஏற்றவாறு 20 ரூபாய் 25 ரூபாய் என கூடுதலாக கிடைக்கும். 

    இந்நிலையில், சமீப நாட்களாகவே மழை இருந்தும் முறையான இன்சென்டிவ் போன்றவற்றை அந்நிறுவனம் முழுமையாக மாற்றியமைத்துள்ளது. மேலும் 7 நாட்கள் தொடர்ந்து வாகனத்தை இயக்கவில்லை என்றால் வாகன ஓட்டிகளின் கணக்குகள் முடக்கப்படும் என்ற குறுஞ்செய்தி நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது. திடீரென எந்த அறிவிப்பும் இல்லாமல் இப்படி இன்சென்டிவ் போன்றவற்றை குறைத்ததால் வாகன ஓட்டிகள்  அதிர்ச்சி அடைந்தனர். 

    இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சென்னை மையிலாப்பூரில் உள்ள பொருட்களை எடுக்கும் பகுதியில், ஆர்டர் எடுக்க மாட்டோம் என 100-க்கும் மேற்பட்ட டன்சோ வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்போது மாறியுள்ள விதிமுறைகளை மாற்றி முறையாக தருமாறு கோரிக்கை வைத்தனர். 

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

    ‘ட்விட்டரில் பணிக்குச் சேர யாரையும் பரிந்துரைக்கமாட்டேன்’ – நிறுவன துணைத் தலைவர் பகிரங்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....