Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழகத்தில் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள்; திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள்; திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

    பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.12.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    2022-23ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மேலும் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, மதுரை- அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி – அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை – அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் – அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இந்த மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இரத்த அழுத்தமானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக இருக்கும். இதற்கான செலவினங்கள் அந்தந்த திருக்கோயிலின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.

    இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 21 டன் எடை கொண்ட பக்தர்களின் தலைமுடி, 47 கோடி ரூபாய்க்கு ஏலம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....