Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபெட்ரோல் பங்குகளில் ஏற்படும் அவலம்... பாதுகாப்பை உறுதி படுத்த நடவடிக்கை- மக்கள் வாழ்வுரிமை இயக்கம்

    பெட்ரோல் பங்குகளில் ஏற்படும் அவலம்… பாதுகாப்பை உறுதி படுத்த நடவடிக்கை- மக்கள் வாழ்வுரிமை இயக்கம்

    புதுச்சேரி பெட்ரோல் நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

    புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செயலாளர் ஜெகன்நாதன் சார்பாக துணைநிலை ஆளுநர், மாவட்ட ஆட்சியர், குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் ஆகியோருக்கு தனித்தனியே மனு அளிக்கப்பட்டது.

    அளிக்கப்பட்ட அந்த மனுவில்,

    புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சி பரப்பு முழுவதும் பெட்ரோல்- டீசல் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPC) போன்ற பொதுத்துறை நிறுவனங்களும்,ESSAR, நயாரா, ரிலையன்ஸ் போன்ற தனியார் பெட்ரோல் நிலையங்களும், பொது மக்களாகிய நுகர்வோருக்கு எரிபொருட்கள் விநியோகம் செய்து வருகின்றன.

    அவ்வாறு விநியோகம் செய்திடும் பொதுத்துறை மற்றும் தனியார் பெட்ரோல் நிலையங்கள், அரசு மற்றும் குடிமை பொருள் வழங்கல் நுகர்வோர் விவகாரங்கள் துறை சட்ட விதிகளுக்கு மாறாக இயங்கி வருகின்றன. குறிப்பாக பெட்ரோல் நிலையங்களில் பாதுகாப்பு சாதனங்கள், முதலுதவி மருந்து பெட்டிகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி, எரிபொருள் நிரப்பும் வாகனங்களுக்கு காற்று நிரப்பும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவதாக அறிய வருகிறோம்.

    மேற்படி பெற்றோர் நிலையங்கள் மேற்கூரைகள் இல்லாமலும், ஊழியர்கள் மற்றும் பெண்கள் உணவு அருந்தி ஓய்வெடுக்கும் அறைகள் இல்லாமலும், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தகுதியற்ற எரிவாயு உருளைகளில்(சிலிண்டர்) சமையல் எரிவாயுவினை நிரப்பி ஆபத்தான முறையில் நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

    பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் குடோன்களை உரிய வகையில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்திட வேண்டும். மேலும் பொதுமக்கள் மற்றும் நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திடவும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக இம்மனுவின் மூலம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தேர்தல் ஆணையம்: வாக்காளர் பட்டியல் பார்வையாளராக 10 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....