Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தொண்டர் மீது கோபத்தில் 'கல்' எறிந்த அமைச்சர் நாசர் - வெளியான பரபரப்பு காணொளி

    தொண்டர் மீது கோபத்தில் ‘கல்’ எறிந்த அமைச்சர் நாசர் – வெளியான பரபரப்பு காணொளி

    ஆய்வுப் பணிக்கு சென்றபோது நாற்காலி எடுத்து வர கால தாமதம் ஆனதால், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொண்டர் மீது கல் வீசிய சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    திருவள்ளூர் மாவட்டம், வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். 

    இந்தப் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அங்கு சென்றிருந்தார். அப்போது கட்சித் தொண்டர்களிடம் நாற்காலிகளை எடுத்து வரக் கூறினார். 

    அங்கு கட்சி நிர்வாகிகள் அதிகமானோர் இருந்த நிலையில், ஒரு சில நாற்காலிகள் மட்டுமே எடுத்துவரப்பட்டது. மேலும் இதில் கால தாமதமும் ஏற்பட்டது. இதன் காரணமாக கோபம் அடைந்த அமைச்சர் நாசர் கீழே கிடந்த கல்லை தூக்கி தொண்டர் மீது வீசினார். 

    இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

    ‘துணிவு’ பட பாணியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....