Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசு மருத்துவமனையை அலறவிட்ட அமைச்சர் மா.சு! மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?

    அரசு மருத்துவமனையை அலறவிட்ட அமைச்சர் மா.சு! மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?

    மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த மருத்துவர்கள் 4 பேரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பிரிவிற்கு சென்ற அமைச்சர் அவர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் 4 பேர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, பணிக்கு வராமல் விடுப்பு எடுத்ததால் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதையடுத்து மருத்துவர்கள் 4 பேரும் சஸ்பெண்ட் அதாவது பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    மேலும் ஆய்வுக்கு பின் மருத்துவமனையை சரியாக கண்காணிக்காமல் மெத்தனமாக செயல்பட்ட மாவட்ட மருத்துவ இணை இயக்குனரையும் பணியிட மாற்றம் செய்தார். இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு முன்பாக சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் அங்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய பேறுகால, பச்சிளங் குழந்தை சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து, பல் மருத்துவ சிகிச்சை பிரிவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்டவற்றையும் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

    ஆளுநரின் அலட்சியத்தை தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது- பாமக தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....