Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கிறிஸ்துமஸ் தீவில் மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் ஊர்வலம்: பாதுகாப்பை பலப்படுத்திய ஆஸ்த்திரேலியா

    கிறிஸ்துமஸ் தீவில் மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் ஊர்வலம்: பாதுகாப்பை பலப்படுத்திய ஆஸ்த்திரேலியா

    ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் இனப்பெருக்கத்திற்கான ஆண்டின் இறுதி புலம்பெயர்தலை தொடங்கியிருக்கின்றன. 

    ஆஸ்திரேலிய நாட்டின் கீழ் உள்ளது கிறிஸ்துமஸ் தீவு. இங்கு பார்க்கும் இடமெங்கும் செந்நிறத்தில் நண்டுகளாக காட்சியளிக்கின்றன. இங்கு அதிக அளவிலான நண்டுகள் இருக்கின்றனன. 

    இங்கு வாழும் நண்டுகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. இதன்காரணமாக இங்குள்ள நண்டுகள் காட்டிற்லிருந்து கடலை நோக்கி இடம் பெயர்ந்து செல்கிறது. குறிப்பாக ஆண் நண்டுகள் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியே வந்து, தங்களுக்கான துணையை தேர்ந்தெடுத்துக்கொண்டு ஜோடியாக கடலுக்கு செல்கின்றன. 

    அப்படி செல்லும் நண்டுகள் இந்திய பெருங்கடலில் இனப்பெருக்கம் செய்து முட்டைகள் இடும். சுமார் ஒரு லட்சம் முட்டைகளை பெண் நண்டுகள் இடுகின்றன. பிறகு இரண்டு வாரங்கள் கழித்து, குட்டி நண்டுகளுடன் மீண்டும் காட்டுப்பகுதிக்கு அவை திரும்புகின்றன. 

    பல ஆயிரக்கணக்கான நண்டுகள் வரும் வழியிலேயே கடல் வாழ் உயிரினங்களுக்கு தீனியாகின்றன. இவற்றுக்கு போக மீதம் இருக்கும் நண்டுகள் மட்டுமே காட்டுக்கு செல்கின்றன. 

    இந்நிலையில், தற்போது நவம்பர் மாதம் நடந்துகொண்டிருப்பதால், நண்டுகள் செல்ல ஏதுவாக அந்நாட்டு அரசு, அத்தீவில் உள்ள குறிப்பிட்ட சாலைகளை மூடியுள்ளது. மேலும் பாதசாரிகளுக்கு மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. நண்டுகள் செல்வதற்கு என தனி பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

    லட்சக்கணக்கான நண்டுகள் ஒரே நேரத்தில் கடலை நோக்கி செல்வதை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

    இதையும் படிங்க: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி சுற்று ; இந்திய வீராங்கனை பி.வி.சிந்து திடீர் விலகல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....