Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மேகாலயா சட்டமன்றத் தேர்தல்; வேட்பாளர்களை களமிறக்கிய பாஜக

    மேகாலயா சட்டமன்றத் தேர்தல்; வேட்பாளர்களை களமிறக்கிய பாஜக

    மேகாலயா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. 

    திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16 ஆம் தேதியும், நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் ஒரே கட்டமாகத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து இன்று மேகாலயா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி மேகலாயாவின் 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதன் மூலம் பாஜக மேகாலயாவில் தனித்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. 

    அதே சமயம், 60 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட நாகலாந்து சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் மட்டுமே பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும் நாகலாந்து சட்டமன்றத் தேர்தலில் பாஜக தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. 

    இதையடுத்து, பாஜக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தற்போது தொடங்கி உள்ளது. 

    தஞ்சாவூரில் 500 ஏக்கர் அளவில் பயிர்கள் சேதம்; சோகத்தில் விவசாயிகள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....