Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்எந்த தொலைக்காட்சிக்கு 'தளபதி-67' ?

    எந்த தொலைக்காட்சிக்கு ‘தளபதி-67’ ?

    ‘தளபதி 67’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸூம் வாங்கியுள்ளது. 

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

    மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்தில் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் மற்றும் மேத்யூ தாமஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 

    இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் தொடர்பாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அதன்படி, ‘தளபதி 67’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸூம் வாங்கியுள்ளது. 

    மேலும், முன்னதாக ‘தளபதி 67’ படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகளில் பெரிய வித்தியாசம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....