Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஉடற்கூராய்வு பார்க்கும் மருத்துவ உதவியாளர்களே விபத்துக்கும் சிகிச்சை அளிக்கும் அவலநிலை - தஞ்சையில் நேரும் கொடூரம்

    உடற்கூராய்வு பார்க்கும் மருத்துவ உதவியாளர்களே விபத்துக்கும் சிகிச்சை அளிக்கும் அவலநிலை – தஞ்சையில் நேரும் கொடூரம்

    அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஒரத்தநாட்டின் சுற்றுவட்டார பகுதிகளான தென்னம நாடு, கண்ணதங்குடி மேலையூர், கண்ணதங்குடி கீழையூர் என 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த அரசு மருத்துவமனையை நம்பி இருக்கின்றனர். 

    ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அவசர பிரிவுகளில் மருத்துவர்கள் இல்லாத சூழல் நிலவுவதால், மருத்துவ உதவியாளர்களே சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

    இந்நிலையில், கண்ணதங்குடி கீழையூரைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு காலில் அடிப்பட்டதன் காரணமாக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாத காரணத்தினால், உடல் கூராய்வு செய்யும் மருத்துவ உதவியாளர்களே சிகிச்சை அளித்துள்ளனர். இது தொடர்பாக அவரது உறவினர்கள் எடுத்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    மேலும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடப்பதற்கு முன்பாக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

    தில்லி மகளிர் ஆணைய தலைவியை காரில் இழுத்து சென்ற நபர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....