Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கலானது: மேயர் ப்ரியாவின் முக்கிய திட்டங்கள் என்ன?

    சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கலானது: மேயர் ப்ரியாவின் முக்கிய திட்டங்கள் என்ன?

    பெருநகர சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு சென்னை ரிப்பன் மாளிகையில் இந்த கூட்டம் தொடங்கியது. 

    ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த நிதிநிலை அறிக்கை கூட்டமானது சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா தலைமையில் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி மேயராக ப்ரியா கடந்த மாதம் 4 ஆம் தேதி பொறுப்பேற்றார். இவரின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில், துணை மேயர் மு. மகேஷ்குமார் மற்றும் கமிஷனர் ககன் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் இந்த நிதிநிலை அறிக்கையானது தாக்கல் செய்யப்படுகிறது. 

    இந்த நிதிநிலை அறிக்கையை, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயதாஸ் தாக்கல் செய்கிறார். மேலும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று மதியம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே, திமுக கூட்டணி பெரும்பான்மையில் உள்ளதால், இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் அறிவிப்புகள் பெருபான்மையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிமுக உறுப்பினர்கள் சொத்துவரி உயர்வை எதிர்த்து கேள்விகள் எழுப்பி வெளிநடப்பு செய்துள்ளனர். 

    சொத்துவரி உயர்வு பற்றிய முக்கிய அறிவிப்புகள், வருவாய் திட்டங்கள், மக்களுக்கான திட்டங்கள் போன்றவை நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. 

    • சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
    • சென்னை மாநகராட்சி துப்புரவு பணியார்களுக்கு மருத்துவ சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிக்கையில் அறிவிப்பு. 
    • தேங்காய் மறுசுழற்சி செய்யும் திட்டம் அறிவிப்பு. 
    • மறுசுழற்சி மற்றும் திடக்கழிவு மேலாண்மை மூலம் பெறப்படும் வருவாய்களை துப்புரவு பணியாளர்களுக்கு கொடுப்பனவுகளாக கொடுக்கப்படும் என்று அறிவிப்பு.
    • பயோ-கேஸ் ஆலை மாதாவரத்தில் விரைவில் திறக்கப்படும் என்று அறிவிப்பு.  
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....