Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த தேவமாதாவின் பிறந்தநாள் திருவிழா ..மகிழ்ச்சியில் பக்தர்கள்

    வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த தேவமாதாவின் பிறந்தநாள் திருவிழா ..மகிழ்ச்சியில் பக்தர்கள்

    ஏசு கிறிஸ்துவின் தாய் மரியாளின் பிறந்த தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ஆம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகப்பட்டினம், வேளாங்கண்ணி திருத்தலம், சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தலம் உள்ளிட்ட பல திருத்தங்களில் இன்று திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னையின் பேராலயம் மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று. சாதி மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் சங்கமிக்கும் புகழ் வாய்ந்த திருத்தலமாக உள்ளது. அதிலும் பண்பாட்டினாலும், மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த வேலை நகரில் வீற்றிருக்கும் வேளாங்கண்ணி மாதாவின் தரிசனங்களை பெறாதவர்கள் யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது.

    அந்த அளவிற்கு உலக புகழ்பெற்ற ஆலயமான வேளாங்கண்ணியில், மாதாவின் பிறந்த நாள் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆண்டு திருவிழா பக்தர்கள் இன்றி எளியமுறையில் நடை பெற்றது.

    இந்த ஆண்டு இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.

    வெகு விமரிசையாக நடைபெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதாவை தாங்கிய பெரிய தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார்.

    இதையடுத்து இரவு 8 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒழிக்க மின்விளக்கு மலர் அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரியதேர் பேராலய முகப்பிலிருந்து புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டு இருந்த பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைதட்டி ‘மரியே வாழ்க’ என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர்.

    மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சமன்சு , புனித சூசையப்பர், புனித அந்தோனியார், புனித செபஸ்தியார், அமலோர்பவமாதா, புனித உத்ரியமாதா ஆகிய 6 தேர்கள் வண்ண விளக்குகளில் அலங்காரங்களுடன் அணிவகுத்தன.

    இந்த 7 தேர்கள் முன்பாகவும் தேரை பின்தொடர்ந்ததும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். தேர்வலம் வரும்போது பக்தர்கள் தேர் மீது பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.

    கொடியிறக்கம் மூலம் இந்த ஆண்டு திருவிழா நிறைவு பெற்றது. இந்த இரண்டு நாட்களிலும் உள்ளூர் பக்தர்களுக்கும் கூட அனுமதி வழங்கப்படவில்லை.

    மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம், தலைமையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் மேற்பார்வையில் மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆறு ஆய்வாளர்கள், 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் வெளியூர் பக்தர்கள் உள்ளே வராதவாறு வேளாங்கண்ணி நகரை சுற்றி ஒன்பது சோதனை சாவடிகள் என மாவட்டம் முழுவதும் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வேளாங்கண்ணி பேராலய திருவிழா நடைபெற்று முடிந்தது.

    அதேபோல் சென்னை பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவும், திருச்சி மேலப்புதூரில் உள்ள மாதா கோயில் திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....