Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்! பரபரப்பில் மக்கள்!

    மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்! பரபரப்பில் மக்கள்!

    வேலைக்கு செல்லுமாறு கூறிய மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர், தானும் தற்கொலை செய்துகொண்டர் ..!

    மத்தியப்பிரதேசத்தில் வேலைக்குச் செல்லுமாறு பலமுறை கூறியதற்காக மனைவியைக் கத்தியால் குத்திகொன்ற நபர், தானும் தற்கொலை செய்துகொண்டார்.

    போபால், மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் விபோர் சாஹு என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரிது, வயது 23. இவர், வேலைக்குச் செல்லுமாறு பலமுறை கூறியதற்காக தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    வெள்ளியன்று ஜபல்பூரில் உள்ள வீட்டில், 30 வயது மதிக்கதக்க விபர் சாஹூ இறந்த நிலையிலும், அவரது மனைவி ரித்து ரத்த வெள்ளத்திலும் கிடந்துள்ளனர்.

    இதுகுறித்து விரிவாக பேசிய ராஞ்சி காவல்துறை பொறுப்பாளர் சஹ்தேவ்ராம் சாஹு, “சம்பவத்தின் போது விபோர் சாஹுவின் தாயும் சகோதரரும் மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்றிருந்தனர். வீடு திரும்பும் போது தம்பதியினர் இறந்து கிடந்தனர்.இவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், டிரைவராக இருந்த விபோர் சாஹு கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் மனம் உடைந்த மனைவி, வேலைக்குச் சென்று சம்பாதித்து வருமாறு பலமுறை அவரிடம் கூறினார்.

    கடும் வாக்குவாதத்திற்கு பிறகு, மனைவியை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

    வேலைக்கு போக சொல்லி வற்புறுத்திய மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எத்தனால் கலந்த பெட்ரோல் என்றால் என்ன, அது வாகனங்களுக்கு பயனுள்ளதா அல்லது தீங்கு விளைவிக்குமா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....