Friday, March 31, 2023
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசர்கார் திரைப்பட பாணியில் வாக்களிக்க அமெரிக்காவில் இருந்து காஞ்சிபுரம் பறந்த நபர்!

    சர்கார் திரைப்பட பாணியில் வாக்களிக்க அமெரிக்காவில் இருந்து காஞ்சிபுரம் பறந்த நபர்!

    சர்கார் திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக அயல்நாட்டிலிருந்து சென்னைக்கு வருவார். இந்த காட்சி பலரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. இன்றும் பலர் இந்த சர்கார் திரைப்பட காட்சியை நினைவு கூர்வர். ஆனால் இப்படியான நிகழ்வு சினிமாவில் மட்டுமே அரங்கேறும் என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம் அல்லது நாமே கூறி இருப்போம்.

    sarkar vijay

    இப்படியாக நாம் கூறியதை பொய் என்று நிறுபிக்கும் வகையில் இன்று ஒரு நிகழ்வு அரங்கேறியிருக்கிறது. இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒருவர் அமெரிக்காவில் உள்ள ‘லாஸ் ஏஞ்சல்ஸ்’-இல் இருந்து ஒருவர் வந்திருக்கிறார். 

    election அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் காஞ்சிபுரத்தில் உள்ள அப்பாராவ் என்ற ஊரைச்சார்ந்த இம்தியாஸ் ஷெரிப் என்பவர், விமானத்தின் மூலம் இன்று அதிகாலை சென்னை வந்தடைந்து அதன்பிறகு காஞ்சிபுரத்திற்கு வந்து அவருக்குரிய வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவிட்டுள்ளார். 

    இந்நிகழ்வு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இம்தியாஸ் ஷெரிப் அவர்கள், கூடுமானவரையில் வாக்களிக்க வேண்டிய நாட்களில் ஊருக்கு வந்தடைந்து விடுவேன் என்றவர், அவ்வாறே இம்முறையும் நான் வாக்களிக்க இங்கே வந்ததாக தெரிவித்தார்.

    இணையத்தில் மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் பகுதிகளிலும் இம்தியாஸ் ஷெரிப் அவர்களை பற்றிய பேச்சதான் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    kalashtra sexual harassment issue

    நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்; பாலியல் தொல்லை காரணமாக கலாஷேத்ரா மாணவர்கள் திட்டவட்டம்!

    சென்னை கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.  சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் சிலர் காணொளி வெளியிட்டு புகார்களை...