Friday, May 10, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த அப்டேட்.. இது சங்கரின் கேம்!

    ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த அப்டேட்.. இது சங்கரின் கேம்!

    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் படத்திற்கு கேம் சேஞ்சர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    பிரம்மாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் ஷங்கரின் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஆர்.சி. 15’ என்று பெயரிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    மிகப்பெரிய பொருட் செலவில் தயாராகி வரும் இப்படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே சூர்யா, ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்க, கதையை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் ராம் சரணின் இன்று தன்னுடைய 38- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

    இதைமுன்னிட்டு, இந்தப் படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி, இப்படத்திற்கு ‘கேம் சேஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வீடியோ வடிவில் படக்குழு வெளியிட்டுள்ளது. 

    மேலும், தேர்தல், வாக்குப்பதிவு, நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இதனால் ‘கேம் சேஞ்சர்’ அரசியல் பேசும் படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    கடலூரில் சோகம்; பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....