Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: அதிர வைத்த காவல்துறை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: அதிர வைத்த காவல்துறை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் 12 ஆம் தேதி அதிகாலைக்குள்ளாக 4 ஏடிஎம் மையங்களில் மர்ம நபர்கள் அங்குள்ள இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 

    இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். அதன்படி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோதனையைத் தொடங்கினர். மேலும்  9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரம், கர்நாடகம், ஹரியானா உள்ளிட்ட மாநில எல்லைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய இருவரை பிப்ரவரி 17 ஆம் தேதி காவல்துறையினர் ஹரியானா மாநிலத்தில் கைது செய்து விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். 

    இதனிடையே, கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி திருவண்ணாமலை நீதிமன்ற நீதிபதி முன்பு பிடிபட்ட இருவரும் நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் மார்ச் 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி தெய்வீகன் உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் இரு கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. 

    தொடர்ந்து கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேனை தனிப்படை காவல்துறையினர் பிப்ரவரி 21 ஆம் தேதி கைது செய்தனர்.

    மேலும் இரு கொள்ளையர்கள் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியான நிஜாமுதீனை தனிப்படை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதுவரை திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ரஜினியின் அடுத்தப் படம் இவருடன்தான்; வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....