Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோட்டில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை... காரணம் என்ன?

    ஈரோட்டில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… காரணம் என்ன?

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 7 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. 

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அந்த கல்லூரியின் சுற்றுவட்டார பகுதிகளான எலவுமலை, சுண்ணாம்பு ஓடை, சித்தோடு ஆகிய இடங்களில் இருக்கும் 7 டாஸ்மாக் கடைக்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பு அறை, வாக்கு எண்ணிக்கை அறைகளை சுற்றி துணை ராணுவப்படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்புப்படை வீரர்கள், ஆயுதப்படை மற்றும் ஈரோடு காவல்துறை என மொத்தம் 5 அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 17,324 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் 5,627 வாக்குகள் பெற்று இருந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,146 வாக்குகள் பெற்று இருந்தார். தற்போது 3-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

    ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ – உற்சாகத்தில் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....