Thursday, May 9, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகனமழை எதிரொலி: மராட்டியத்தில் 102 பேர் பலி

    கனமழை எதிரொலி: மராட்டியத்தில் 102 பேர் பலி

    மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மராட்டிய மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தனு பகுதியில் 54.7 மி.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது. 

    தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சுமார் 20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

    இதுகுறித்து மராட்டிய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு, மரங்கள் முறிதல் மற்றும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுதல் உள்ளிட்ட சம்பவங்களில் 102 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....