Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்யார் அடுத்த முதல்வர்? பரபரப்பின் உச்சத்தில் மகாராஷ்டிர அரசியல்..

    யார் அடுத்த முதல்வர்? பரபரப்பின் உச்சத்தில் மகாராஷ்டிர அரசியல்..

    மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அம்மாநில புதிய முதல்வராக சிவசேனா கட்சியின் முன்னணித் தலைவர் ஏகநாத் ஷிண்டே பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

    சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடிக் கூட்டணியானது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி செய்துவந்தது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏகநாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராகத் திரும்பினர்.

    இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநில அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டணியின் சார்பாக முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே பதவி விலகுமாறு தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏகநாத் ஷிண்டே ஆகியோர் வற்புறுத்தி வந்தனர்.

    பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு இன்று உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையினை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    பரபரப்பாக சென்ற அரசியல் களத்தில் இன்று தனது பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டிய உத்தவ் தாக்கரே, நேற்று இரவே தனது பதவியினை ராஜினாமா செய்தார்.

    இந்த ராஜினாமாவினை ஏற்பதாக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி இன்று அறிவித்தார். உத்தவ் தாக்கரேயின் ராஜினாமாவை அடுத்து இன்று நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை நான்கு மணி நிலவரப்படி மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏகநாத் ஷிண்டே முதல்வர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

    மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியினை ராஜினாமா செய்ததினையடுத்து தற்போது அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக கட்சியானது ஆட்சியமைக்கவுள்ளது.

    மகாராஷ்டிரா பாஜக கட்சியின் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை 4:30 மணிக்கு ஆட்சியமைக்க உரிமைக் கோருவதற்காக அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரியினை சந்திக்கச் சென்றார்.

    பட்னாவிஸ்சுடன் ஏகநாத் ஷிண்டேவும் சென்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் ஆளுநர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பட்னாவிஸ், தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாகத் தெரிவித்தார். 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதே மக்கள் பாஜக ஆட்சியினை விரும்பினார் என்றும் கூறியுள்ளார்.

    இதனையடுத்து மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏகநாத் ஷிண்டே பதவியேற்பார் என்று பட்னாவிஸ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மகாராஷ்டிரா முதல்வராய் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளிவந்துள்ள இந்த செய்தியானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் மஹாராஷ்டிரா முதல்வராக ஏகநாத் ஷிண்டே இன்று இரவு ஏழு மணி அளவில் பதவியேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....