Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநிறைவடைந்த பாலமேடு ஜல்லிக்கட்டு; காரை பரிசாக பெற்ற வீரர்

    நிறைவடைந்த பாலமேடு ஜல்லிக்கட்டு; காரை பரிசாக பெற்ற வீரர்

    பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய தமிழரசனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

    பொங்கல் திருநாளை முன்னிட்டு, நேற்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே, தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    இதைத்தொடரந்து, ஜல்லிக்கட்டு தொடங்கியது. இப்போட்டியில், காளைகளை அடக்க 355 இளைஞர்கள் முறைப்படி பதிவு செய்துள்ளனர். முதலில் ஐய்யனார் கோயில் காலை உள்பட கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் காளைகள் அவிழ்க்கப்பட்டன.

    இதன்பின்பு, மொத்தம் பாலமேட்டில் 9 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 860 மாடிகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 23 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார்.

    சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தமிழரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த தமிழரசனுக்கு முதல்வர் சார்பில் அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக வழங்கினார்.

    19 காளைகளை அடக்கி 2 ஆம் இடம் பெற்ற பாலமேட்டைச் சேர்ந்த மணிகண்டனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....