Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை மக்களுக்கு அடுத்த சிக்கல்.. "மெட்ராஸ் ஐ" பரவுகிறது.. இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

    சென்னை மக்களுக்கு அடுத்த சிக்கல்.. “மெட்ராஸ் ஐ” பரவுகிறது.. இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

    பருவமழை தொடங்கியுள்ள இந்த நிலையில் சென்னையில் பலருக்கும் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண்வலி நோய் ஏற்பட்டு வருகிறது. 

    பொதுவாகவே மழைக்காலங்களில் காலநிலை மாற்றத்தால் இந்த ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் வலி நோய் ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இந்த மெட்ராஸ் ஐ ஏற்பட்டால், கண் உறுத்தல், கண் சிவப்பு நிறமாக மாறுதல், கண்களில் இருந்து அழுக்கு வெளியேறுதல், கண்ணீர் வடிதல் போன்றவை ஏற்படக்கூடும். இந்த கண் நோய் பொதுவாக குழந்தைகளுக்கு அதிகமாக பரவ வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே கண் மருத்துவரை அணுகுவது அவசியம். 

    இந்த நோய் மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய நோய் ஆகும். அதனால், தனி தனியே கைக்குட்டைகளை பயன்படுத்துதல் நல்லது. அதேபோல் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வலிக்கிறது என கண்களை விரல்களால் அழுத்தி துடைக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

    இந்நிலையில், சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களாகவே இந்தக் கண் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: நோ ஃப்ரிட்ஜ் ? நோ கெமிக்கல் ? 3 மாதம் கெட்டுப்போகாத ‘ஆவின் டிலைட்’ பால் அறிமுகம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....