Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல் - திருப்பி அனுப்பிய கடலோர காவல்படை!

    புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல் – திருப்பி அனுப்பிய கடலோர காவல்படை!

    கேசினோ சூதாட்ட புகாரால் எழுந்த எதிர்ப்பால் புதுச்சேரி வந்த சென்னை சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சொகுசு கப்பல், கடலிலேயே நின்று விட்டு சென்னைக்கு மீண்டும் புறப்பட்டது.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி வைத்த சொகுசு கப்பல், விசாகப்பட்டினம் சென்றுவிட்டு புதுச்சேரியை வந்தடைந்தது. ஆனால், அந்த சொகுசு கப்பல் புதுச்சேரி வருவது தொடர்பாக எந்த அனுமதியும் பெறவில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

    சென்னையிலிருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டத்தத்தை தமிழக அரசின் சுற்றுலாத் துறை வடிவமைத்தது. அதன்படி சென்னை துறைமுகத்திலிருந்து ‘எம்பிரஸ்’ எனும் சொகுசு கப்பலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைத்தார்.

    சொகுசு கப்பல்..

    இக்கப்பல் சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் சென்றுவிட்டு, விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று காலை புதுச்சேரிக்கு வந்தடைந்தது. புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் கலங்கரை விளக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பல், புதுச்சேரி ஆழ்கடல் எல்லையைச் சுற்றி பார்த்துவிட்டு, இங்கிருந்து ஆழ்கடல் எல்லை வழியாக மீண்டும் சென்னை சென்றடையத் திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்த சுற்றுலாப் பயணத்தில் விசாகப்பட்டினம், புதுச்சேரியில் கப்பல் நிறுத்தப்படும்போது அங்கே உள்ள நகரைச் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் புதுச்சேரி அரசு அனுமதி வழங்காததை தொடர்ந்து, புதுச்சேரி கடலில் 4 மணி நேரம் முகாமிட்டு இருந்த இந்த சொகுசு கப்பல் திரும்பிச் சென்றது. ஏனெனில், பயணத்தின் ஒரு பகுதியாக, சொகுசு கப்பல் புதுச்சேரி உப்பளம் துறைமுக பகுதிக்கு வந்ததும், சிறிய படகுகள் மூலம் பயணிகளை இறக்கி, புதுச்சேரியை சுற்றி பார்க்க வைப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். பின், புதுச்சேரியில் இருந்து மீண்டும் சென்னைக்கு கப்பல் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், சொகுசு கப்பலில் சூதாட்ட கேசினோ விடுதி இருப்பதால் கப்பலை புதுச்சேரி பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

    மேலும், சொகுசு கப்பல் புதுச்சேரி கடலில் நிற்பதற்கு அரசு அனுமதி தந்துள்ளதா, அப்படி அனுமதி தந்திருந்தால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு கவர்னர் தமிழிசை, கப்பல் நிற்பது தொடர்பாக கோப்பு தன்னிடம் வரவில்லை; அப்படியே கப்பல் வந்தாலும் கலாசார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது என, கூறினார். இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி கடல் எல்லை பகுதிக்குள் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் வந்தது.

    புதுச்சேரி கடலில் நின்ற சொகுசு கப்பலை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காததால், புதுச்சேரி கடல் பகுதியில் 4 மணி நேரம் முகாமிட்டு இருந்த கப்பல், காலை 8:30 மணியளவில் புறப்பட்டு சென்றது. சொகுசு கப்பலுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் கடற்கரை சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து துறைமுக அதிகாரிகள் கூறும்போது, ‘சொகுசு கப்பல் பயணிகளை உப்பளம் துறைமுகத்தில் இறக்கி நகருக்குள் அழைத்து செல்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. புதுச்சேரி அரசு இதுவரை அனுமதி தரவில்லை. எனவே பயணிகளை ஏற்றி வந்த சொகுசு கப்பல் புதுச்சேரி கடலில் நின்று விட்டு திரும்பிவிட்டது’ என்றனர்.

    இது ஜோக்கர் ரிட்டர்ன்ஸ்; மீண்டும் களத்தில் குதிக்கப்போகும் ஜோக்கர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....