Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுகவில் உறுப்பினர் அந்தஸ்தில் கூட சசிகலா இல்லை: எடப்பாடி பழனிச்சாமி அதிரடிப் பேச்சு!

    அதிமுகவில் உறுப்பினர் அந்தஸ்தில் கூட சசிகலா இல்லை: எடப்பாடி பழனிச்சாமி அதிரடிப் பேச்சு!

    சசிகலா சிறைக்கு சென்று வந்த பின்னர், அதிமுகவில் இணைய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை அதிமுகவில் ஒருபோதும் சேர்க்க மாட்டோம் எனக் கூறி வருகிறார்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா, சசிகலாவின் பக்கம் சென்று, அவருக்காக பல்வேறு வேலைகளை செய்து வருகிறார். ஆனாலும், சசிகலாவின் எந்த முயற்சியும் எடுபடவில்லை. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தனித்தனியே அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சசிகலா அதிமுகவில் உறுப்பினர் என்ற அந்தஸ்தில் கூட இல்லை என்றும், அவருக்கும் அதிமுகவிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. தருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்றதும் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி நிருபர்களிடம் சந்தித்து பேசினார்.

    அதில், மதம் மற்றும் கோயில் சம்பந்தமான விஷயங்களில் முழுமையான விபரங்கள் தெரிந்த பிறகு தான், எதையுமே கூற முடியும். அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியது அவசியம்.

    ஆண்டாண்டு கால வழிமுறைகளிலும், கோயில் வழிமுறைகளிலும் தலையிடுவது அநாகரிகமாக செயலாகும். ஆதீன விவகாரங்களில் மூக்கை நுழைக்க, திமுக அரசு முயற்சி மேற்கொள்கிறது. 500 வருடங்களாக பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    திடீரென்று திமுக அரசு அதற்கு தடை விதிப்பது என்பது சரியான செயல் அல்ல. பல அரசியல் கட்சிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்த பின்பு தான், தமிழக அரசு இறங்கி வந்து பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி கொடுத்தது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

    மேலும் அவர் பேசுகையில், திமுக அரசு எதைபற்றியும் கவலைப்படுவதாக தெரியவில்லை. குடும்பம் செழிக்க வேண்டும் எனவும், எந்தெந்த துறைகளில் வருமானம் வருகிறது என்றுமே பார்க்கின்றனர். மக்களைப் பற்றியும், விவசாயிகளின் பிரச்சனை பற்றியும் துளியும் சிந்திக்கவில்லை என்றும் அவர் பேசினார்.

    சசிகலா அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லை. அவருக்கும், அதிமுகவிற்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் ஆளும் கட்சியை தவிர்த்து, மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்கட்சிகள் தான். ஆனால், பிரதான எதிர்கட்சி அதிமுக தான் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

    மணமகன் ஓட்டம் ; மாமனாருடன் நடந்து முடிந்த திருமணம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....