Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இந்தி விக்ரம் வேதா எப்போது திரைக்கு வரும்: படப்பிடிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு !

    இந்தி விக்ரம் வேதா எப்போது திரைக்கு வரும்: படப்பிடிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு !

    ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் விக்ரம் வேதா. மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் மாதவன் விக்ரமாகவும், விஜய் சேதுபதி வேதாவாகவும் போட்டி போட்டு நடித்து அசத்தி இருந்தனர். போலீஸ், கேங்ஸ்டர் என இரு கோணத்தில் பயணிக்கும் இருவரை ஒரு புள்ளியில் சந்திக்கும் வைக்கும் கதைக்களத்தை கொண்ட திரைப்படம் ‘விக்ரம் வேதா’.

    தமிழில் ஹிட்டான இப்படம் தற்போது இந்தியிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தையும் புஷ்கர் – காயத்ரி தான் இயக்குகின்றனர். இப்படத்தில் விக்ரமாக சையிப் அலிகானும், வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சில நாட்களுக்கு முன்பு விக்ரம் – வேதா இந்தி ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான காயத்ரி சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

    அவர் கூறியதாவது :

    விக்ரம் வேதா படம் 2017-ம் ஆண்டு தமிழில் ரிலீசானதும், எங்களுக்கு முதல் ஆளாக போனில் அழைத்து வாழ்த்து சொன்னது ஹிருத்திக் ரோஷன் தான்.

    அந்த கதையின் தன்மை அவருக்கு புரிந்திருந்ததை எங்களால் உணர முடிந்தது. அதனால் அவரை நடிக்க வைத்ததாக கூறிய அவர், இப்படம் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக குறிப்பிட்டார். ஹிருத்திக் ரோஷனை பொறுத்தவரை எந்தவித ஈகோவும் இல்லாத மனிதர், நாம் எது சொன்னாலும் கேட்டுக்கொண்டு நடித்துக் கொடுப்பார்” என காயத்ரி பாராட்டி உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதால் உடனடியாக தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. இந்த படம் அடுத்த அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இனி ஆதார் வீட்டுக்கே வரும்; அடையாள ஆணையத்தின் புதிய யோசனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....