Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுறைந்த எரிவாயு சிலிண்டர் விலை; ஆனாலும்...இது குறையவில்லையே!

    குறைந்த எரிவாயு சிலிண்டர் விலை; ஆனாலும்…இது குறையவில்லையே!

    சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால் இல்லத்தரசிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இதனால் மாதாந்திர பட்ஜெட் போட்டு வாழ்பவர்களின் வாழ்க்கையும் பெரும் திண்டாட்டமானது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.2,500யை தாண்டியது. இதனால் டீ, காபி, உணவு பொருட்களின் விலைகள் சில இடங்களில் அதிகரிக்கத் துவங்கின.

    இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது. இதனால் சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதோடு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

    இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால், சென்னையில் வணிகபயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

    இதன்மூலம் சென்னையில் 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.2373க்கு விற்பனையாகும். இந்த விலைக்குறைப்பு மூலம் மும்பையில் ரூ.2,307 க்கு விற்ற சிலிண்டர் ரூ.2,171க்கும், கொல்கத்தாவில் ரூ.2,455க்கு விற்ற சிலிண்டர் ரூ.2,322க்கும் விற்பனையாகும்.

    அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று 1018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    விக்ரம் திரைப்படம் விடிவெள்ளியா? விழுந்த இடியா? – எதிர்ப்பார்ப்பில் திரையுலகம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....