Wednesday, March 20, 2024
மேலும்
    Homeவானிலைகாற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்தது - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்தது – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    முன்னதாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலவடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம்-தெற்கு ஆந்திர கடலோர பகுதியை இன்று இரவு நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிக கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதேசமயம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருப்பதன் காரணமாக, தமிழகத்தில் மழை அளவு தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்கமழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....