Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சூப்பர் ஸ்டாரை சூரியனுக்கு நிகராக புகழ்ந்த லவ் டுடே நாயகன் - வைரலாகும் சந்திப்பு புகைப்படம்

    சூப்பர் ஸ்டாரை சூரியனுக்கு நிகராக புகழ்ந்த லவ் டுடே நாயகன் – வைரலாகும் சந்திப்பு புகைப்படம்

    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தினை ரஜினி பாராட்டியுள்ளார்.

    ‘கோமாளி’ திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ள திரைப்படம்தான், லவ் டுடே. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

    இத்திரைப்படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது குறித்து
    அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    இதைத்தாண்டி என்ன கேட்கப்போகிறேன்? சூரியனுக்கு பக்கத்தில் நிற்பது போல இதமாக இருந்தது. இறுக்கமான அணைப்பு, அந்த கண்கள், அந்த சிரிப்பு, அந்த ஸ்டைல் மற்றும் அன்பு. என்ன ஒரு மனிதர். சூப்பர் ஸ்டார் என்னுடைய படத்தைப் பார்த்து பாராட்டினார். அவர் கூறிய வார்த்தைகளை எப்போதும் மறக்க மேட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ‘சிக்கன் ரைஸ்’ வராததால் சின்னா பின்னமான ஹோட்டல்.! நண்பர்களுடன் வாலிபர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....