Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு12 மணிக்கு வீடு ஜப்தி நோட்டீஸ் ! 3 மணிக்கு ரூ.70 லட்சம் பரிசு! மீன்...

    12 மணிக்கு வீடு ஜப்தி நோட்டீஸ் ! 3 மணிக்கு ரூ.70 லட்சம் பரிசு! மீன் வியாபாரிக்கு அடித்த திடீர் ஜாக்பாட்..

    லாட்டரி டிக்கெட்டில் மீன் விற்பனையாளருக்கு ரூ.70 லட்சம் கிடைத்துள்ளது.

    கேரள மாநிலம் கொல்லம் பகுதி அருகேயுள்ள மைனாகப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பூக்குஞ்சு. இவருக்கு 40 வயதாகிறது. மீன் வியாபரியான இவர் பைக்கில் சென்று மீன் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 

    இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு இவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் ரூ. 9 லட்சம் கடன் வாங்கினார். ஆனால், இவரால் முறையாக தவணையை கட்ட முடியவில்லை. இதனால் வட்டி மீது வட்டி போட்டு கடன் தொகை ரூ.12 லட்சத்தை தாண்டியது.

    இதையும் படிங்க: அதிகம் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? கவனம் தேவை…விழித்துக்கொள்ளுங்கள்…!

    இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் வங்கி அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று ஜப்தி சார்ந்த நோட்டீசை கொடுத்தனர். இதனால், என்ன செய்வது என தெரியாமல் பூக்குஞ்சு பரிதவித்துக்கொண்டிருந்தார்.

    அப்போதுதான், அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஆம், இரு தினங்களுக்கு முன் மீன் வியாபாரத்திற்காக சென்றபோது ரூ.70 லட்சம் முதல் பரிசுத் தொகையான அக்க்ஷயா லாட்டரி சீட்டை பூக்குஞ்சு வாங்கினார். அந்த சீட்டுக்குத்தான் முதல் பரிசான ரூ.70 லட்சம் கிடைத்துள்ளது. 

    ஜப்தி நோட்டீஸ் கிடைத்த அன்று மாலை 3 மணிக்குத்தான் இந்த லாட்டரியின் குலுக்கல் நடந்தது. சிறிது நேரத்திலேயே முதல் பரிசு ரூ.70 லட்சம் விழுந்தது. குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பயத்தில் இருந்த தனக்கு, கடவுள் இந்த அதிர்ஷ்டம் கொடுத்துள்ளார் என்று பூக்குஞ்சு மகிழ்ச்சியுடன் இச்செய்தியை தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....