Thursday, May 9, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை! எதற்கு தெரியுமா?

    நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை! எதற்கு தெரியுமா?

    எத்தையம்மன் பண்டிகை திருநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    நீலகிரி மாவட்டத்தில் பல இன மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படுகர் (Badagas) இன மக்களும் பல காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குலதெய்வம் எத்தையம்மன் ஆகும். எத்தை அம்மன் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெகு விமர்சையாக நடைபெறும். 

    இந்தப் பண்டிகையில் ஜெகதளா, ஒதனட்டி, காரக்கொரை, மல்லிக்கொரை, மஞ்சுதளா, பேரட்டி, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்த ஊர்மக்கள் கலந்து கொண்டு விழாவை நடத்துவர். 

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான எத்தையம்மன் பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் இந்தப் பண்டிகைக்கு 8 ஊர் கிராம மக்களும் விரதம் இருந்து பாதயாத்திரை மேற்கொள்வர். 

    படுகர் இன மக்களின் இந்த எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நாளை உள்ளூர் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீத்  உத்தரவிட்டுள்ளார்.

    இசைவெளியீட்டு விழாவுக்கு விஜய் வந்த விதம்… கருத்து தெரிவித்த இசையமைப்பாளர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....