Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்

    தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்

    தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் – சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து விசிக தலைவர்  வலியுறுத்தியுள்ளார்.

    தேயிலை தோட்டத்தில் வசிக்கும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மலையக தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர் .

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன்,

    TANTEA நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது, அவர்கள் அனைவரும் அதே குடியிருப்பில் தங்க வைத்து அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம்.

    பணி ஓய்வு பெற்ற 670 குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கும் அரசு செலவில் முழுமையாக வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் அரசு கவனித்துக் கொள்ளும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

    இதையும் படிங்க:கடல் கடந்தாலும் மாறாத பண்பாடு! பாலி நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

    மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களுக்கு தமிழகத்தில் முழு உருவ சிலை நிறுவ வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

    கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளங்கோ இருக்கை அமைக்க வேண்டும், மனோன்மணியம் சுந்தரனார் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற திருவனந்தபுரம் தமிழ் சங்கம் வைத்துள்ள கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளோம்.

    பொருளாதார அளவுகோலை கொண்டு இட ஒதுக்கீடு வழங்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளோம்.

    10% இட ஒதுக்கீட்டை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்று மக்களிடையே விளக்க தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்துவதென திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மழையால் மக்கள் பெருமளவு பாதிக்காத வகையில் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது, குறிப்பாக சென்னை மாநகரம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    மழைக்காலத்தில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.

    இதையும் படிங்க: கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடலை வாங்கிய பெற்றோர்..இன்று மாலை இறுதிச்சடங்கு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....