Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவிடம் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு; அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

    இந்தியாவிடம் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு; அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

    ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    இந்தியாவுடன் அர்ஜென்டினா,  கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பிரேசில், இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, ஆகிய நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பு என வளரும் மற்றும் வளர்ந்த 20 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு இருந்து வருகிறது . 

    இந்நிலையில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்க இருக்கிறது. 

    ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அனைத்துக்கட்சி கூட்டம் வருகிற டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. 

    இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. 

    இந்தக் கூட்டத்தில், ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்பது மற்றும் அடுத்த ஓராண்டுக்குள் நடத்தப்படும் ஜி20 அமைப்பின் மாநாடுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....