Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாலதா மங்கேஷ்கரின் பிறந்தநாள் கொண்டாட்டம்; 40 அடி உயரமுள்ள வீணை சிலை திறப்பு!

    லதா மங்கேஷ்கரின் பிறந்தநாள் கொண்டாட்டம்; 40 அடி உயரமுள்ள வீணை சிலை திறப்பு!

    லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, அயோத்தியின் முக்கியமான  சந்திப்பில் 40 அடி நீளமுள்ள வீணை சிலை திறக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் இசைக்குயில் என்று அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

    இந்நிலையில், அவரின் 93-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது நினைவாக 7.9 கோடி மதிப்பீட்டில் சரயு நதிக்கரையின் குறுக்கே அயோத்தியின் முக்கிய சந்திப்பில், 14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இதனை பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 28) காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

    மேலும் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி ஆகியோர் இணைந்து லதா மங்கேஷ்கர் சவுக்கை திறந்து வைத்தனர்.

    இதுகுறித்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: 

    லதா அக்காவின் பிறந்தநாளை நினைவு கூர்கிறேன். நான் நினைவு கூருவதற்கு நிறைய இருக்கிறது. எண்ணற்ற தொடர்புகளில் அவர் மிகவும் பாசத்தைப் பொழிந்தார். இன்று அயோத்தியில் உள்ள ஒரு சவுக்கிற்கு அவர் பெயர் சூட்டப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகப் பெரிய இந்தியச் சின்னங்களில் ஒருவருக்கு இது ஒரு பொருத்தமான அஞ்சலி.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: நடமாடும் திருமண மண்டபமாக மாறிய ‘ட்ரக் லாரி’ – வியந்து பாராட்டி ‘ஆனந்த் மகேந்திரா’ ட்விட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....