Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாவலரால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    காவலரால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் காவலரால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நபா தாஸ் நேற்று காலை ஜார்சுகுடாவில் இருக்கும் பிரஜராஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார். அப்போது அவர்  வாகனத்தில் இருந்து வெளியே இறங்கிய சமயத்தில், காவலர் ஒருவரால் பலமுறை மார்பு பகுதி நோக்கி சுடப்பட்டார்.

    அமைச்சரை சுட்டவர் ஏஎஸ்ஐ கோபால் தாஸ் என்பவர் என கண்டறியப்பட்டது. இதையடுத்து, கோபால் தாஸ் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனிடையே, அமைச்சர் ஜார்சுகுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மேலும் இவரின் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஒருவர் காவலரால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மிரட்டும் ‘பதான்’ – வசூலில் சாதனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....