Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான வெற்றி; விமர்சனங்களுக்கு உள்ளாகும் இந்திய அணி!

    நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி; விமர்சனங்களுக்கு உள்ளாகும் இந்திய அணி!

    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. 

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடர் மற்றும் இருபது ஓவர் தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே, ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. இதில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. 

    இதைத்தொடர்ந்து, இருபது ஓவர் தொடர் தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி நேற்று லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது. 

    இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தும், ரன்கள் சேர்க்க முடியாமலும் தவித்தனர். 

    இதனால், நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து, 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. 

    ஆனால், இந்திய அணியினரும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்காமல் திணறியது. இதனின் வெளிப்பாடாக, சுப்மன் கில் 11, இஷான் கிஷண் 19, ராகுல் திரிபாதி 13, வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். 

    இருப்பினும், சூர்யகுமார் யாதவ் சற்றே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கு துணையாக இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருந்தார். மொத்தத்தில், இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்து வென்றது.

    சூர்யகுமார் யாதவ் 26 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 15 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர் 1-1 என்ற சமநிலையை எட்டியுள்ளது. 

    மேலும், 100 ரன்கள் என்ற எளிய இலக்கை அடைய இந்திய அணி பெரிய அளவில் தடுமாறியது ரசிகர்களிடையே விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்தியா – நியூசிலாந்துக்கு இடையேயான அடுத்தப் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ஆப்கானிஸ்தானில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பலி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....