Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; இன்று முதல் பெயர் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; இன்று முதல் பெயர் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

    அதில், நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளதாகவும், இந்த தேர்வை எழுத உள்ள மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தேர்வுத்துறை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த 17 ஆம் தேதி வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவ-மாணவிகளின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால், அவற்றை சரிசெய்து கொள்வதற்கு தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    அதன்படி, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இன்று முதல் 25 ஆம் தேதிக்குள் எமிஸ் தளம் வழியாக பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்தப் பணிகளை தலைமை ஆசிரியர் உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஓடிடியில் ‘மைக்கேல்’ – வெளிவந்த அப்டேட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....