Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணியில் நேர்ந்த மாற்றம் ; குல்தீப் யாதவ் இல்லை ஆனால் இவர் உண்டு !

    இந்திய அணியில் நேர்ந்த மாற்றம் ; குல்தீப் யாதவ் இல்லை ஆனால் இவர் உண்டு !

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது, மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வந்த நிலையில், மூன்று இருபது ஓவர் போட்டிகளும், ஒரு டெஸ்ட் போட்டியும் முடிவடைந்தது. இருபது ஓவர் தொடரில் இலங்கை அணியை வொயிட் வாஷ் செய்தும், நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மாபெரும் வெற்றியை பெற்றது.

    சர்ச்சை 

    jaddu

    முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ரவீந்திர ஜடேஜா தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்ய விடாமல் டிக்ளர் செய்தது மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்பட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வருகிற 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

    குல்தீப் யாதவ் இல்லை 

    axar patel

    இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்விற்கு பதிலாக அக்சர் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதன்முதலாக இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் அறிவிக்கப்பட்ட அணியில் அக்சர் படேல் இடம்பெற்றிருந்தார். பின்பு காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் அக்சர் படேல் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அதனூடே இரண்டாவது  டெஸ்ட் போட்டிக்கு முன்பு உடற்தகுதித் தேர்வுக்கு பின் அக்சர் படேல் இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்பட்டது. அதன்படியே தற்போது அக்சர் படேல் இரண்டாவது  டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

    இரண்டாவது  டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் 

    test

    ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஷ்வின், சவுரப் குமார், ரிஷப் பாரத் பந்த், ஸ்ரீகர் பந்த், ஸ்ரீகர்வ் பந்த். , உமேஷ் யாதவ், முகமது ஷமி.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....