Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்பெருந் திட்டங்களுக்கான வாய்ப்புகள் - ஜெர்மனி வங்கி நிதியுதவி

    பெருந் திட்டங்களுக்கான வாய்ப்புகள் – ஜெர்மனி வங்கி நிதியுதவி

    ஒன்றிய அரசு அறிவித்த 2022-2023 வரவு செலவுக் கணக்கில் சாதாரண மக்களுக்கு எவ்வித பயனும் இல்லாதது மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இப்போது தமிழ்நாடு அரசு 2022-2023 க்கான வரவு செலவுக் கணக்கின் அறிக்கை தயாராகி வருகிறது. இதனை பெரிதும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டின் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ள தொழில்நுட்ப பிரிவில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் ஐ ஆர் டி இதற்கான ஏலங்களை விரைவில் கேட்க உள்ளது. மேலும் இந்த 500 மின்சாரப் பேருந்துகள் திட்டத்திற்கான நிதியுதவி பணத்தை சுமார் 80 சதவீதம் ஜெர்மன் வளர்ச்சி வங்கி (kfw) மூலம் பெறப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே திட்டமிடப்பட்ட இந்த மின்சார பேருந்துகளில் மாற்று திறனாளிகள் அமர்வதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் இப்பேருந்துகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் இதன் இறுதி விசாரணை ஓரிரு வாரங்களில் எதிர்ப்பார்க்கலாம். இதன் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இதற்கான ஏலங்கள் விடப்படும் எனத் தெரிகிறது.

    2000 இ-பேருந்துகள் வாங்கும் திட்டம் 2018-2019 நிதியாண்டில் திட்டக் குறிப்பில் budget மட்டும் இடம் பெற்றிருந்தது ஆனால், அதற்கான நிதியுதவி வரவு செலவுக் கணக்கில் இடம் பெறவில்லை. அதே போல் 2020-2021 ஆம் ஆண்டிலும் திட்டத்தில் இடம்பெற்று அரசு சார்பில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி (kfw) உடன் கையெழுத்தானது எனவும் கூறப்பட்டு இறுதியில் நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிதியாண்டில் ( 2022-2023 ) இ- பேருந்துக்குள் திட்டத்திற்கான நிதியுதவி ஒதுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆண்டு வரவு செலவுக் கணக்கு வளர்ச்சி உள்ளதாக இருக்கும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....