Saturday, May 4, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்'உங்கள் ஒளியில்... ' - கே.எல்.ராகுலின் மனைவியின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரல்!

    ‘உங்கள் ஒளியில்… ‘ – கே.எல்.ராகுலின் மனைவியின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரல்!

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுலுக்கும் பாலிவூட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும் திருமணம் நடைபெற்றது.

    கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் நண்பர்களாக இருந்த நிலையில், இருவருக்கிடையிலும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்து பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். 

    இதைத்தொடர்ந்து, திருமண ஏற்பாடுகள் அதிவேகத்தில் நடந்து வந்தன. நடிகர் சுனில் ஷெட்டி தரப்பில் அதிகாரப்பூர்வமாக திருமணம் குறித்து அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, புனே அருகில் உள்ள கண்டாலாவில் இருக்கும் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

    இதன்பின்னர், நேற்று கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பாலிவூட் பிரபலங்களில் சிலரும், கிரிக்கெட் பிரபலங்கள் சிலரும் கலந்துக்கொண்டனர். 

    இந்நிலையில், திருமணம் முடிந்தப் பிறகு கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் சார்ந்த புகைப்படத்தை பதிவிட்டார். அப்புகைப்படத்தின் கீழ் ‘ உங்கள் ஒளியில் நான் எப்படி காதலிக்க வேண்மென்று கற்றுக்கொள்கிறேன்.’ என்று பதிவிட்டிருந்தார். 

     

    View this post on Instagram

     

    A post shared by Athiya Shetty (@athiyashetty)

    மேலும், அப்பதிவில், ‘இன்று (நேற்று) எங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் முன்னிலையில், மகிழ்ச்சியையும், அன்பையும் அளித்த எங்கள் வீட்டில் நாங்கள் திருமணம் செய்துக்கொண்டோம். எங்களின் இந்த திருமண பயணத்திற்கு நீங்கள் ஆசிர்வதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ என்றும் தெரிவித்துள்ளார். அதியா ஷெட்டியின் இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    வெறும் வாயில் வடை சுடும் அண்ணாமலை! போட்டிக்கு அழைக்கும் மாணிக்கம் தாகூர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....