Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஉலகமே உற்று நோக்கும் இடமாக கீழடி மாறி இருக்கிறது- அமைச்சர் அன்பில் மகேஷ்

    உலகமே உற்று நோக்கும் இடமாக கீழடி மாறி இருக்கிறது- அமைச்சர் அன்பில் மகேஷ்

    உலகமே உற்று நோக்கும் இடமாக கீழடி மாறி இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

    சிவகங்கை மாவட்டம், கொந்தகை கிராமத்தில் கீழடி அருங்காட்சியகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். 

    பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், முதல்வர் கீழடி அருங்காட்சியத்தை திறந்து வைத்தப்பிறகு ஒட்டு மொத்த உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறி இருப்பதாக தெரிவித்தார். 

    மேலும் வரலாற்று துறையில் தொல்லியல் மீது ஆர்வம் இருக்கும் ஆயிரம் ஆசிரியர்களுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் மூலமாக பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் ஆசிரியர்களுக்கு கீழடி அருங்காட்சியகத்தில் 4 நாட்கள் பயிற்சியும் 2 நாட்கள் களத்திலும் பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

    தொடர்ந்து பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கல்வி சுற்றுலாவில் கீழடியும் இடம் பெறுவதற்கான திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

    பள்ளிகளில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட விளையாட்டு மைதானம் அமைந்திருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு உடற்கல்வி வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். 

    ஆஸ்திரேலிய தேர்வுக்குழுவினர் பதவி விலக வேண்டும் – கவாஸ்கர் காட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....