Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஜிகர்தண்டா அடுத்த பாகத்தில் களமிறங்கும் பிரபல நடிகர்கள்..வெளிவந்த அப்டேட்

    ஜிகர்தண்டா அடுத்த பாகத்தில் களமிறங்கும் பிரபல நடிகர்கள்..வெளிவந்த அப்டேட்

    ஜிகர்தண்டா திரைப்படத்தின் அடுத்தப் பாகத்தின் படப்பிடிப்பு இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

    மதுரை நகரத்தைப் பின்னணியாக கொண்டு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்ற திரைப்படம்தான், ஜிகர்தண்டா. 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

    இத்திரைப்படத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், குரு சோமசுந்தரம், அம்பிகா போன்றோர் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். மேலும், சந்தோஷ் நாரயணன் ஜிகர்தண்டா திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.

    2014-ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது என்றுதான் கூற வேண்டும். வித்தியாச திரைக்கதை, வித்தியாச படத்தொகுப்பின் வாயிலாக கதைச்சொல்லிய இத்திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை திரையுலகமே பாராட்டியது. குறிப்பாக, ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா பெரிதும் பாராட்டப்பெற்றார்.
    மேலும், ஜிகர்தண்டா திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். அதோடு, ஜிகர்தண்டா திரைப்படத்துக்கு சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதும் அளிக்கப்பட்டது. இந்த விருதை விவேக் ஹர்சன் பெற்றுக்கொண்டார்.

    விருதுகள், நல்ல விமர்சனங்கள் என பல நல்நிகழ்வுகளை தன்னிடத்தில் கொண்டுள்ள ஜிகர்தண்டா திரைப்படத்தின் அடுத்தப்பாகம் உருவாகவுள்ளதாகவும், அதன் எழுத்துவேலை சென்று கொண்டிருப்பதாகவும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஜிகர்தண்டா-2 திரைப்படத்தின் படபூஜை இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இத்திரைப்படத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எலான் மஸ்க் மீது பதியும் வழக்குகள்; படுக்கை அறையாக மாறிய அலுவலகம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....