Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் 144 தடை உத்தரவு

    கர்நாடகாவில் 144 தடை உத்தரவு

    கர்நாடகாவில் பாஜக செயலாளரின் படுகொலையை தொடர்ந்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தின் பாஜக செயலாளராக இருந்தவர் பிரவீன் நெட்டாரு. இவர், கடந்த ஜூலை 26-ம் தேதி தனது இறைச்சிக் கடையை மூடிக்கொண்டிருந்த நேரத்தில், மர்ம நபர்கள் கோடாரி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். 

    இச்சம்பவத்தில், பலத்த காயமடைந்த பிரவீன் நெட்டாரு-வை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து, பெல்லாரி காவல்துறை இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், பிரவீன் நெட்டாரு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக பா.ஜ.க உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மங்களூரு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. 

    மேலும், பாஜக, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பிரவீன் நெட்டாருவின் உடலை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து, பிரவீன் நெட்டாரு வீட்டின் முன் திரண்ட நூற்றுக்கணக்கான ஹிந்து இயக்க ஆர்வலர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். பிரவீனைக் கொலை செய்தவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்று முழக்கமிட்டனர்.  பிரவீன் நெட்டாரு வீட்டின் முன் திரண்டவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த  கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலின் வாகனத்தை வழிமறித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

    இதைத் தொடர்ந்து, தென்கன்னட மாவட்டத்தில் உள்ள கடைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள  புத்தூர், சுள்ளியா, கடப்பா உள்ளிட்ட தாலுகாக்க‌ளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், பெல்லாரி காவல்துறை 4 தனிப் படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பெங்களூரில் புதன்கிழமை உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘ குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். இதை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இது திட்டமிட்ட கொலையாகவே உள்ளது. பிற கொலை சம்பவங்களுக்கும் இதற்கும் ஒற்றுமை இருக்கிறது. முழுமையான விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

    கர்நாடகாவில் பாஜக செயலாளர் மர்ம நபர்களால் கொலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....