Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சந்திரமுகியாக மாறப்போகும் கங்கனா ரணாவத்; இணையத்தில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

    சந்திரமுகியாக மாறப்போகும் கங்கனா ரணாவத்; இணையத்தில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

    ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி-2 திரைப்படத்தில் பாலிவூட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2005-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான், சந்திரமுகி. இத்திரைப்படத்தை பி.வாசு இயக்க, பிரபு, ஜோதிகா, நயன்தாரா மற்றும் வடிவேலு போன்றவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். 

    இந்நிலையில், சமீபத்தில் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, படப்படிப்பும் தொடங்கியது. சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசுதான் சந்திரமுகி 2-ம் பாகத்தையும் இயக்குகிறார்.

    சந்திரமுகி 2-ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும், இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 

    சந்திரமுகி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பாலிவூட் நாயகி கங்கனா ரணாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சந்திரமுகி வேடத்தில் அவர் நடிக்க உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. 

    முன்னதாக, ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படத்திலும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி திரைப்படத்திலும் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    டிசம்பர் 1 ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....