Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாடிசம்பர் 1 ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    டிசம்பர் 1 ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

    இந்த நிதி ஆண்டுக்கான கூட்டத்தொடரின் போது நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்து இருந்தார். 

    இதனிடையே இன்று டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

    இதன்படி, தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்களின் மதிப்பில்  டிஜிட்டல் ரூபாயும் சில்லறை பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்தனைக்கு E₹-R என்ற குறியீடு வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த அறிமுகமானது முதற்கட்டமாக எஸ்பிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய 4 வங்கிகளில் வர உள்ளது. இதைத்தொடர்ந்து பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி வங்கி, கோட்டக் மகேந்திரா உள்ளிட்ட வங்கிகளும் இணைய இருக்கின்றன.

    மேலும், தில்லி, மும்பை, பெங்களூரு, புவனேஷ்வர் ஆகிய நகரங்களில் டிசம்பர் 1 ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகமாகிறது. இதையடுத்து அகமதாபாத், கவுகாத்தி, இந்தூர், பாட்னா உள்ளிட்ட நகரங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

    இதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி 1,2,5,10,20,50,100,200,500,2000 மதிப்பிலான டிஜிட்டல் ரூபாய்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

    கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அதிநவீன சிறப்பு சொகுசு பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....