Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கமல் - மணிரத்னம் இணையும் படத்தில் சூப்பர் ஸ்டார்களா?

    கமல் – மணிரத்னம் இணையும் படத்தில் சூப்பர் ஸ்டார்களா?

    கமல்ஹாசனின் 234-ஆவது படத்தில் பாலிவூட் நடிகர் ஷாருக்கான் மற்றும் மலையாள நடிகர் மம்மூட்டி ஆகியோர் கவுரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 

    கமல்ஹாசனின் திரைப்பட வாழ்வில் மிக முக்கியமான ஒரு திரைப்படமென்றால் அது நாயகன். அத்திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கினார். மிகப்பெரிய ஹிட் அடித்த நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னமும், கமல்ஹாசனும் இணையவே இல்லை. இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இருவரும் மீண்டும் இணையவுள்ளனர். 

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என மூன்று முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ள திரைப்படத்தை, இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். 

    கமலின் 234 -வது திரைப்படமாக உருவாகவுள்ள இத்திரைப்படம் குறித்து சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், ரசிகர்கள் குஷியாகினர். 

    இந்நிலையில், தற்போது கமல்-234 படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, இப்படத்தில் பாலிவூட் நடிகர் ஷாருக்கான் மற்றும் மலையாள நடிகர் மம்மூட்டி ஆகியோர் கவுரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 

    கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள கமல்-234-ஆவது திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற முகேஷ் அம்பானி குடும்ப விழா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....