Monday, May 6, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இது ஜோக்கர் ரிட்டர்ன்ஸ்; மீண்டும் களத்தில் குதிக்கப்போகும் ஜோக்கர்!

    இது ஜோக்கர் ரிட்டர்ன்ஸ்; மீண்டும் களத்தில் குதிக்கப்போகும் ஜோக்கர்!

    உலக அளவில் பல மொழிகளில் பல திரைப்படங்கள் எடுக்கப்படுகிறது. ஆனால், அதில் சில படங்களை ரசிகர்கள் அதிகளவில் கொண்டாடுவர். உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தும் படங்களும், விருதுகளை அள்ளிக் குவிக்கும் படங்களும் சில தான்.

    அப்படிப்பட்ட திரையுலகில், ஆஸ்கர் விருது என்பது உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டாலே, அது மக்கள் மனதில் வெற்றிப்படம் தான். உலக அளவில் வசூல் சாதனையும் நிகழ்த்தி, ஆஸ்கர் விருதையும் வென்றால் அந்தத் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

    இப்படியான ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் தயாரானால், அதை விட ரசிகர்களுக்கு வேறென்ன வேண்டும். கடந்த 2019 ஆம் ஆண்டில் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தி, ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற “ஜோக்கர்” என்ற ஹாலிவுட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போகிறது என்றத் தகவலை, அப்படத்தின் இயக்குநர் டோட் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் ஜாக்குயின் ஃபீனிக்ஸ் நடிப்பில் ‘ஜோக்கர்’ திரைப்படம் வெளியானது. உலகம் முழுதிலும் உள்ள ரசிகர்களால் இப்படம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. வசூலிலும் எவரும் எதிர்ப்பார்க்காத வகையில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியது.

    இப்படத்திற்காக ஜாகுனின் பீனிக்ஸின் நடிப்பு அபரிமிதமாக இருந்ததால், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். ஜோக்கர் திரைப்படத்தில் சிறந்த ஒரிஜினல் இசைக்காக ஹில்டுர் குனாடோட்டிருக்கு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. மேலும், கோல்டன் குளோப் மற்றும் கோல்டன் லயன், உள்பட பல சர்வதேச திரைப்பட விருதுகளையும் வாங்கி குவித்தது இத்திரைப்படம்.

    இந்த நிலையில் ஜோக்கர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக, அப்படத்தின் இயக்குநர் டோட் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். இயக்குநர், தானும் ஸ்காட் சில்வரும் எழுதிய ஸ்கிரிப்ட்டின் அட்டைப் பக்கத்தை இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் படத்தின் தலைப்பை வெளிப்படுத்தியுள்ளார். “ஜோக்கர்: ஃபோலி எ டியூக்ஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜாக்குயின் ஃபீனிக்ஸ், ஸ்கிரிப்டைப் படிக்கும் புகைப்படத்தையும் பிலிப்ஸ் பகிர்ந்துள்ளார்.

    இரயில் எஞ்சினுக்கு அடியில் அமர்ந்து 190 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....