Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமோடிக்கு எதிரான ஆவணப்படத்தை திரையிட முயன்ற மாணவர்கள்; தாக்குதல் நடத்திய மர்மநபர்கள்

    மோடிக்கு எதிரான ஆவணப்படத்தை திரையிட முயன்ற மாணவர்கள்; தாக்குதல் நடத்திய மர்மநபர்கள்

    பிரதமர் நரேந்திர மோடி குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை ஜேஎன்யு மாணவர்கள் திரையிட முயன்றபோது, அவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கலவரம் நடைபெற்றது. இக்கலவரம் நடைபெறும் போது குஜராத் முதல்வராக இருந்தார். இந்நிலையில், சமீபத்தில் இந்தக் கலவரம் தொடர்பாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஊடகமான பிபிசி செய்தி நிறுவனம் ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற ஆவணப் படத்தை கடந்த வாரம் வெளியிட்டது. 

    இந்த ஆவணப்படம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது. இருப்பினும், பல இணையதளங்களில் இத்திரைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பலர் இந்த ஆவணப்படத்தை பார்த்தும், திரையிட்டும் வருகின்றனர். 

    அந்த வகையில், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு பிபிசியின் ஆவணப் படத்தை திரையிட முடிவு செய்து, அதற்காக அகில இந்திய மாணவர் சங்கம் ஏற்பாடையும் செய்தது. இந்த முடிவுக்கு பலகலைக்கழக நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. 

    இதையும் மீறி, நேற்று இரவு ஆவணப் படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்றிரவு பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் இணையதள சேவையும் நிறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களின் கைப்பேசிகளில் பிபிசி ஆவணப்படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்தனர். அப்போது, மாணவர்கள் மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அந்த புகாரில், ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சிலரின் பெயர்களை குறிப்பிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    திருப்பதி லட்டு வழங்கும் மையத்தில் கொள்ளைச் சம்பவம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....