Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'ஜிகர்தண்டா-2' இப்படித்தான் இருக்குமாம் - கார்த்திக் சுப்புராஜ் சொன்ன தகவல்..

    ‘ஜிகர்தண்டா-2’ இப்படித்தான் இருக்குமாம் – கார்த்திக் சுப்புராஜ் சொன்ன தகவல்..

    கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் பங்குபெற்ற நேர்காணலில் ஜிகர்தண்டா-2 குறித்த ஒரு செய்தியை பகிர்ந்திருக்கிறார். 

    தமிழ்த் திரைப்படங்களை பொறுத்தவரையில் மதுரை நகரத்தைப் பின்னணியாக கொண்டு திரைப்படங்கள் அவ்வபோது வருவது வழக்கமான ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், வெளிவரும் அத்தனை திரைப்படங்களும் மக்களை கவர்ந்துவிடுகிறதா? வசூல் வேட்டை நிகழ்த்தி விடுகிறதா?  என்றால் அது கேள்விக்குறியே. 

    இந்நிலையில், மதுரை நகரத்தைப் பின்னணியாக கொண்டு மேற்கூறிய கேள்விகளை தகர்த்து வசூலிலும் வெற்றிப்பெற்ற திரைப்படம்தான், ஜிகர்தண்டா. 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். 

    இத்திரைப்படத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், குரு சோமசுந்தரம், அம்பிகா போன்றோர் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். மேலும், சந்தோஷ் நாரயணன் ஜிகர்தண்டா திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.

    2014-ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது என்றுதான் கூற வேண்டும். வித்தியாச திரைக்கதை, வித்தியாச படத்தொகுப்பின் வாயிலாக கதைச்சொல்லிய இத்திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை திரையுலகமே பாராட்டியது. குறிப்பாக, ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா பெரிதும் பாராட்டப்பெற்றார்.

    மேலும், ஜிகர்தண்டா திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். அதோடு, ஜிகர்தண்டா திரைப்படத்துக்கு சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதும் அளிக்கப்பட்டது. இந்த விருதை விவேக் ஹர்சன் பெற்றுக்கொண்டார். 

    விருதுகள், நல்ல விமர்சனங்கள் என பல நல்நிகழ்வுகளை தன்னிடத்தில் கொண்டுள்ள ஜிகர்தண்டா திரைப்படத்தின் அடுத்தப்பாகம் உருவாகவுள்ளதாகவும், அதன் எழுத்துவேலை சென்று கொண்டிருப்பதாகவும்  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் பங்குபெற்ற நேர்காணலில் ஜிகர்தண்டா-2 குறித்த ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். அதன்படி, ஜிகர்தண்டா திரைப்படத்தின் முதல் பாகத்திற்கும், இப்பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் அதேசமயம் எதிர்பார்ப்பிலும் உள்ளதாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய அளவில் வெளிவந்த பட்டியல்; ஹிருத்திக் ரோஷனை மிஞ்சிய தனுஷ்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....